Home Local news சுகாதார ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுகளை முன்னைய முறையிலேயே வழங்குவதற்கு தீர்மானம்!

சுகாதார ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுகளை முன்னைய முறையிலேயே வழங்குவதற்கு தீர்மானம்!

அத்தியாவசிய சேவையாக கருதி, சுகாதார நிபுணர்களின் மேலதிக நேர மற்றும் கொடுப்பனவுகளை முன்னைய முறையிலேயே வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச செலவீனங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் திறைசேரியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் அரச ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளரான எஸ்.ஜே.எஸ்.சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சுகாதாரத் துறையிலுள்ள அனைத்து நிபுணர்களின் சேவைகளும் அவசரமானது என்றும், சுகாதாரத் துறையின் தொடர்ச்சியைப் பேணுவது அவசியமானது என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் உள்ள விடயங்களை நிதியமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் எவ்வித வெட்டுக்களும் இன்றி சுகாதார ஊழியர்களுக்கு மேலதிக நேர மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

more news… visit here
READ MORE >>>  திடீரென மயங்கி விழுந்த பெண் மரணம் -கூட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  சீனாவின் உரத்தில் பாரதூரமான ஆபத்து!
READ MORE >>>  திடீரென மயங்கி விழுந்த பெண் மரணம் -கூட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு
Previous articleவிஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் நடித்த அக்னி சிறகுகள் படத்தின் டீசர் இதோ !!
Next articleயாழில் டெங்கு காய்ச்சலினால் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு