Home Cinema சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் டிரெய்லர் பற்றிய வெளியான அப்டேட் இதோ !!

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் டிரெய்லர் பற்றிய வெளியான அப்டேட் இதோ !!

சிவகார்த்திகேயன் மற்றும் பலர் நடித்துள்ள ‘டான்’ திரைப்படம் மே 13ஆம் தேதி வெளியாகிறது

சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இயக்குனர் அட்லியிடம் உதவியாளராகவும் பணியாற்றினார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாகவும், எஸ்.ஜே.சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டான் திரைப்படம் மே 13ஆம் தேதி வெளியாகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டது.

இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான ‘ஜலபுலா ஜங்கு’ மற்றும் ‘பே’ பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியான ‘பிரைவேட் பார்ட்டி’ பாடல் தற்போது சமூக வலைதளங்களில் ஹிட் அடித்துள்ளது.

இப்படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ரிலீஸுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வும் நாளை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

READ MORE >>>  விக்ரமின் கோப்ரா படத்தை பற்றிய வெளியான அப்டேட் இதோ !!

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் டிரெய்லர் பற்றிய வெளியான அப்டேட் இதோ !!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  யுவனிடம் வன்மத்தை கக்கும் அஜித் ரசிகர்கள் !! வெளியான அதிர்ச்சி உண்மை இதோ
Previous articleபீஸ்ட் படத்தால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட யோகிபாபு! அடுத்த இயக்குனரும் இவரா !! வைரலாகும் புகைப்படம் இதோ !!
Next articleபீஸ்ட் படத்தை மொத்தமாக திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட கொடுமை !! வைரலாகும் பட போஸ்டர்கள் !! கதறும் ரசிகர்கள்