சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் இவரா ? அனல் பறக்க வெளிவந்த அப்டேட்

சிவகார்த்திகேயனின் நடிப்பில் டான் திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு வெளியாகியிருக்கும் இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால் தியேட்டர்களில் வசூல் களைகட்டி வருகிறது.

இதை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் பல திரைப் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பல பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் அவரை வைத்து படம் தயாரிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறது.

அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவர்களின் கூட்டணியில் படம் உருவாகும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டு வந்த நிலையில் அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க இருக்கிறது.

இதுபற்றிய அறிவிப்பு கடந்த மாதமே வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் அது தள்ளிப் போடப்பட்டுள்ளது. ஏனென்றால் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.

இந்த பட வேலைகளை முடித்த பின்பே வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தை இயக்கும் முடிவில் இருக்கிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயனும் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருவதால் இந்தக் கூட்டணியில் உருவாக போகும் திரைப்படம் சிறிது காலம் தள்ளி போய் உள்ளது.

அதாவது இந்த திரைப்படம் அடுத்த வருட இறுதியில் தான் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அந்த இடைவேளையில் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் இருவரும் விரைவாக தங்கள் படங்களை முடித்துக் கொண்டு இந்த படத்தில் இணைய இருக்கின்றனர்.

பொதுவாக இவர்கள் இருவரின் படங்களும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட இவர்கள் ஒன்றாக இணைந்து பணிபுரிந்தால் அந்த படம் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். அந்தவகையில் இவர்களின் கூட்டணிக்கு இப்போதிலிருந்தே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..