வெலிகட சிறைச்சாலையினுள் கைத்தொலைபேசி மற்றும் பெட்டரி ஒன்றை எடுத்துச் செல்ல முற்பட்ட சிறைச்சாலை காவலரை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரின் பாதணிக்கும் மறைத்து வைத்திருந்த நிலையில் இவ்வாறு குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறைச்சாலை காவலரை மேலதிக விசாரணைகளுக்காக பொரள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.