Home Ampara news சிறுவனை காணவில்லை

சிறுவனை காணவில்லை

அம்பாறை – சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் காணாமல் போயுள்ளதாக சிறுவனின் தந்தை, இன்று திங்கட்கிழமை (26) முறைப்பாடு செய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவனின் தாயாரும் சொறிகல்முனையைச் சேர்ந்த தந்தையாரும் விவாகரத்து செய்துள்ள நிலையில், தீபன் சயான் என்ற குறித்த சிறுவன் தந்தையாருடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) வீரமுனை பகுதியில் மரண வீடு ஒன்றுக்கு தந்தையார் சிறுவனை அழைத்துச் சென்ற நிலையில், சிறுவன் காணாமல் போயுள்ளார்.

எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவனை காணவில்லை சிறுவனை காணவில்லை

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleலண்டன் குடும்பஸ்தருக்கு அந்த மாதிரி.. வீடியோ அனுப்பி லட்சக் கணக்கில் பணம் கறந்த கிளிநொச்சி யுவதி – படங்கள்
Next articleதான் கட்டிய பரனில் இருந்து மாணவன் சடலமாக மீட்பு!