சிறுமியொருவரை கல்கிசையில் இணையம் ஊடாக பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அவர்களில் வியாபாரி ஒருவரும் விற்பனை நடவடிக்கைக்கு உதவிய ஒருவரும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தாய் உள்ளிட்ட 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இணையத்தளம் ஊடாக, குறித்த சிறுமி விளம்பரப்படுத்தப்பட்டு, பலருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக, கல்கிசை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, விசாரணை முன்னெடுக்கப்பட்டன.
ஒன்லைனில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்த 17 பேர் கைது