சிம்பு நடித்து வரும் பத்து தல படத்தின் லேட்டஸ்ட் மரண மாஸ் அப்டேட் இதோ !!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் தான் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகம் காணப்படுகின்றது.

அந்த வகையில் இவர் நடிக்க இருக்கும் திரைப்படம் தான் பத்து தல. கன்னட சினிமாவில் வெளியாகி ஹிட்டடித்த மப்டி படத்தின் ரீமேக் தான் இந்த படம். இப்படத்தினை ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார்.

சிம்பு நடித்து வரும் பத்து தல படத்தின் லேட்டஸ்ட் மரண மாஸ் அப்டேட் இதோ !!

இந்த படத்தில்கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.

இப்போது சில பல மாற்றங்களோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு சிம்பு இல்லாத மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. சிம்புவுக்காக படக்குழு காத்திருக்கிறது.

இந்நிலையில் இப்போது வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் பத்து தல படத்தில் கவனம் செலுத்த உள்ளார் சிம்பு. இம்மாதம் 27 ஆம் தேதி மீண்டும் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..