Home Jaffna News சித்தன்கேணி எரிபொருள் நிலையத்தில் இப்படியும் மோசடி

சித்தன்கேணி எரிபொருள் நிலையத்தில் இப்படியும் மோசடி

சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவரின் அத்துமீறிய செயற்பாடுகள் காரணமாக சித்தன்கேணி எரிபோருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருள் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

அதனால் வலி.மேற்கு பிரதேச மக்களுக்கான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சங்கானை பலநோக்கு கூட்டுறவி சங்கத்தின் சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் பெற்றோல் விநியோக்கத்தில் மோசடிகள் இடம்பெற்றன.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பின்பற்றப்படும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் எரிபொருள் அட்டையை பதிவு செய்யும் முறைக்கும் சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எதிர்ப்புத் தெரிவித்து அலுவலகர்களை விரட்டியுள்ளார்.

பின்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாணம் மாவட்ட பொறியியலாளர் ஒருவரின் உறவினருக்கு வாகன இலக்கத் தகடு இறுதி இலக்கம் 2 என்ற போதும் இன்றைய தினம் பெற்றோல் வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் வரும் காலத்தில் சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த எரிசக்தி அமைச்சு ஆலோசித்து வருகிறது.

இதனால் வட்டுக்கோட்டை, அராலி, மூளாய், சுழிபுரம் மற்றும் சங்கானை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,சித்தங்கேணியில் அமைந்துள்ள சங்கானை பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வழங்கல், பங்கீட்டு நடவடிக்கைகளின் ஒழுங்குபடுத்தல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இருந்து சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் விலகிக் கொள்வதாக உத்தியோக பூர்வமாக பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பின் முழு விவரமும் வருமாறு :

பொது மக்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் அரச அதிபரின் அறிவுறுத்தலுக்கு இணங்க பிரதேச செயலகங்களின் மேற்பார்வையிலும் ஒழுங்கமைப்பிலும் பொது மக்களுக்கான எரிபொருள் வழங்கப்பட்டு வரும் வேளையில் சங்கானைப் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் தொடர்ச்சியாக தங்களின் விருப்பப்படியே எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக அரச அதிபருக்கும், கூட்டுறவு சங்க ஆணையாளருக்கும் எம்மால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் 22.07.2022ம் திகதியன்று சங்கானை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு எரிபொருள் வருவதையடுத்து எமது செயலக அலுவலர்கள் அதற்கான ஒழுங்குபடுத்தலில் ஈடுபடுத்துவதற்காக அவ் எரிபொருள் நிலையத்திற்கு சென்ற பொழுது எரிபொருள் அட்டையில் பதிவு செய்து வழங்கும் முறைமையில் குறுக்கீடு செய்து சீரான செம்மையான எரிபொருள் வழங்கலின் மேற்பார்வையை அர்த்தமற்றதாக்கும் செயற்பாட்டில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ஈடுபட்ட காரணத்தினால் சங்கானை பலநோக்கு கூட்டுறவுச் சங்கமுடனான எரிபொருள் விநியோக மேற்பார்வையிலிருந்து முற்றாக விலகிக் கொள்கின்றோம் என்பதனையும், கடந்த காலத்தில் எரிபொருள் விநியோகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக மக்களால் எமக்கு முறையிடப்பட்டிருந்த போதும் அவற்றைச் சீர் செய்வதற்கும் பிரதேச செயலகம் தேசிய கொள்கைகளுக்கு அமைவாக திட்டங்களை நடைமுறைப்படுத்த முற்பட்ட போது கூட்டுறவுச் சங்கத்தின் செயற்பாடுகள் தான்தோன்றித் தனமாக அமைவதனால் எரிபொருள் விநியோகத்தில் மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளுக்கு சங்க நிர்வாகமே பொறுப்பு என்பதனையும் அறிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 23/07/2022, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleபயணியால் உதைக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் கீழே விழுந்து மரணம்!