லிட்ரோ நிறுவனத்தினால் நேற்று முதல் சமையல் எரிவாயு வினியோகம் ஆரம்பிக்க பட்டதாக அறிவித்ததை அடுத்து நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் சமையல் எரிவாயு கொள்வனவிற்காக வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை எம்மால் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது
அந்தவகையில் திருகோணமலை துவரங்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் களஞ்சிய சாலைக்கு முன்பாக வீதியை மறித்து சமையல் எரிவாயு கோரி இன்று (01) பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்
குறித்த பிரதேசத்தில் நேற்று இரவு முதல் நீண்ட வரிசையில் வெற்று சிலிண்டர்களுடன் எரிவாயு கொள்வனவிற்கு காத்திருந்ததாகவும் இன்று காலை சமையல் எரிவாயு திருகோணமலை விநியோகஸ்தரின் களஞ்சியசாலைக்கு வருகை தந்ததன் பின்னர் நேற்று முதல் வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்களில் முதல் 400 பேருக்கு மாத்திரமே சமையல் எரிவாயு வினியோகிக்கப்பட்டதுடன் மிகுதி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனைத்தும் கடைகளுக்கு விநியோகம் செய்ய கொண்டு செல்ல முற்பட்டபோது அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் குறித்த பிரதேசத்திற்கு பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
இன்றைய தினம் வருகைதந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களில் மிகுதி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனைத்தும் ஏனையவர்களுக்கு வினியோகிக்க முடியாது எனவும் மிகுதி சிலிண்டர்கள் அனைத்தும் வேறு பிரதேசத்தில் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் எனவும் திருகோணமலை பிராந்திய லிட்ரோ நிறுவனத்தின் விநியோகஸ்தர் மற்றும் லிட்ரோ நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் இனால் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதாகவு பின்னர் குறித்த விநியோகஸ்தரின் களஞ்சியசாலையில் வைத்து இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் நேற்று இரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது இவ்வறிவித்தலை முன்வைக்காமல் இன்று காலை களஞ்சியசாலையின் பிரதான வாயிலில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இவ்விடத்தில் விற்பனை செய்யப்படாது என துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டதையடுத்து அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாகவும் வாடிக்கையாளர்கள் பொலிசாருக்கு தெளிவுப்படுத்தினர்.
பின்னர் பொலிசாரின் தலையீட்டினால் மிகுதி சிலிண்டர்கள் அவ்விடத்தில் வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என லிட்ரோ நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் பின்னர் குறித்த முகவரின் களஞ்சியசாலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளதுடன் இதற்கு பிற்பாடு வாடிக்கையாளர்கள் இவ்விடத்தில் சமையல் எரிவாயு கொள்வதற்காக வருகை தர வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் மற்றும் பிராந்திய விநியோகஸ்தர் வேண்டுகோள் விடுத்திருந்ததுடன் காத்திருந்த வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு இன்றி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
(ரவ்பீக் பாயிஸ்)