இந்திய மத்தியப்பிரதேச மாநிலத்தில் சமோசா விலையேறியதால் வாக்குவதாத்தில் ஈடுபட்டவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டம் பாந்தா என்ற கிராமத்தை சேர்ந்த கஞ்சன் ஷாஹூ என்பவர் சமோசா கடை நடத்தி வந்தார்.
இவர் ரூ15க்கு இரண்டு சமோசா என்ற விலையில் விற்பனை செய்து வந்தார். ஆனால் தற்போது மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் 2 சமோசமா ரூ20க்கு விலை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது அங்கு வந்த ஒருவர் விலையேற்றத்தை எதிர்த்து கேள்விகேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கஞ்சன் சாஹூ தன்னிடம் வாக்குவாதம் செய்தவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
பொலிஸார் அதன் படி வாக்குவாதம் செய்தவரை விசாரித்து அவர் மீதுவழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனால் மனமுடைந்தவர் தன் வீட்டிற்கு சென்று தன் மீது மண்ணெண்னை ஊற்றி நெருப்பு வைத்துக்கொண்டார்.
அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை மருத்துவனமைக்க செல்லும் முன்பே இறந்துவிட்டார். இந்த தற்கொலை குறித்து விசாரணை செய்ய பொலிஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சமோசா விலை கூடியதால் அவர் வாக்குவதாத்தில் ஈடுபட்டு அது பொலிஸ் நிலையம் வரை சென்றதால் மனமுடைந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது.