‘அன்னதானக் கந்தன்’ எனப் போற்றப்படும் வடமராட்சி ஸ்ரீசெல்வச் சந்நிதி ஆலயச் சூழலில் தானங்களில் சிறந்த அன்னதானப் பணியை எந்நாளும் தளர்வின்றி மேற்கொள்ளும் சந்நிதியான் ஆச்சிரமம் சந்நிதி ஆலயப் பெருந் திருவிழா ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது கவலையைத் தருகின்றது.
சந்நிதியான் ஆச்சிரமத்தை உணவுக்காக நாடும், நம்பியிருக்கும் எத்தனையோ முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏழைகள் நெஞ்சில் இந்தச் செய்தி மீண்டும் இடியாய் விழுந்துள்ளது.
‘எல்லாம் அவன்(முருகன்) அருளால் சிறப்பாக நடக்கிறது’ என அவரைச் சந்திக்கும் போதெல்லாம் மோகனதாஸ் சுவாமிகள் கூறுவார்.
கொரோனாத் தொற்றுக் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாட்டிற்கு மத்தியிலும் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகி மோகனதாஸ் சுவாமிகளின் சிறப்பான வழிநடாத்தலிலும், அன்பர்களின் உதவியுடனும் சந்நிதியான் ஆச்சிரமம் சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன்
தனது அன்னதானப் பணியை இடைவிடாது சிறப்பாகச் செய்து வந்தது பலரும் அறிந்த விடயம்.
சந்நிதியான் ஆச்சிரமத்தை தனிமைப்படுத்தியவர்கள் ஆச்சிரமத்தையே உணவுக்காக நம்பியுள்ள ஏழைகள் என்ன செய்வார்கள்? என்பது தொடர்பிலும் சிந்திக்க வேண்டும்.
கவனம் செலுத்த வேண்டும். இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்தாயினும் சந்நிதியான் ஆச்சிரமம் மீண்டும் இயங்க சம்பந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்னதானம் வழங்கியதால் சந்நிதியான் ஆச்சிரம் மூடப்பட்டுள்ளது https://t.co/xJIo8s0FTu via @Jaffna News
— Jaffna news (@whatsap26419960) August 7, 2021