மேயாத மான் புகழ் ரத்ன குமார் இயக்கும் குலு குலு என்ற படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார் என்று முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர்கள் படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் இடம்பெற்றிருந்த படத்தொகுப்பில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, தயாரிப்பு முடிவடைந்ததை உறுதி செய்தனர்.
முன்னதாக இப்படம் பற்றி ரத்னா கூறும்போது, “குலுகுலு எனது முதல் இரண்டு படங்கள் போலவோ, சந்தானம் சார் படங்களைப் போலவோ இருக்காது. ஒவ்வொரு நாளும் கடைசி என வாழ்க்கையை வாழ்ந்து வரும் நாடோடி வாழ்க்கை கொண்ட ஒருவரின் சாகசங்களைப் பற்றியது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணன் சாரின் இசையும், சந்தானத்தின் நடிப்பும் படத்தின் சிறப்பம்சமாக இருக்கும். படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம், கண்டிப்பாக திரையரங்குகளில் வெளியாகும்.”
இப்படத்தில் ஜார்ஜ் மேரியன், தீனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, அதுல்யா சந்திரா மற்றும் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். குலு குலுவை எஸ் ராஜ் நாராயணனின் சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.