Home Local news சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கச் சென்ற பொலிசார்மீது தாக்குதல்!

சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கச் சென்ற பொலிசார்மீது தாக்குதல்!

பூண்டுலோயா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒரு லீற்றர் 130 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கடுமையாக தாக்கி காயமடையச் செய்துள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்குள்ளான இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பூண்டுலோயா மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர் 48 வயதுடைய பூண்டுலோயா பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசெய்தி அறிக்கையில் திடீரென ஒளிபரப்பாகிய ஆபாசப்படம்!
Next articleகறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட மக்கள் வங்கி! சீன தூதரகம் அதிரடி!