Home வவுனியா செய்திகள் சட்டவிரோதமாக மாடுகளை கடத்திச்சென்ற இருவர் கைது.

சட்டவிரோதமாக மாடுகளை கடத்திச்சென்ற இருவர் கைது.

வவுனியா – குடாகச்சக்கொடிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திச்சென்ற இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொறவப்பொத்தானையில் இருந்து வவுனியா நோக்கி வருகை தந்த கப் ரக வாகனத்தினை குடாக்கச்சக்கொடிய பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து சோதனைகளை முன்னெடுத்தனர்.

சட்டவிரோதமாக மாடுகளை கடத்திச்சென்ற இருவர் கைது.

இதன்போது குறித்த வாகனத்தினுள் சட்டவிரோதமான முறையில் மாடுகள் கடத்தி செல்லப்பட்டுள்ளமை தெரியவந்தது.

குறித்த வாகனத்திலிருந்த நபர்களைக் கைது செய்த விசேட அதிரடிப்படையினர் கடத்தலுக்குப் பயன்படுத்திய கப் ரக வாகனத்தினையும் மாடுகளையும் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Gallery Gallery Gallery Gallery

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇஞ்சி டீ பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா?
Next articleஇலங்கையில் எகிறிய ஸ்மார்ட் போன்களின் விலை!