சகல சூப்பர் சகல நேற்றைய ஆட்டத்தில் இதை கவர்த்திர்களா வைரலாகும் வீடியோ !!

ஐபிஎல் லீக் போட்டியின் போது மும்பை ஆல்ரவுண்டர் பொல்லார்ட் சிஎஸ்கே வீரரை முத்தமிடும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் மும்பை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் எடுத்தனர்.

அதேபோல் சென்னை தரப்பில் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகளையும், பிராவோ 2 விக்கெட்டுகளையும், தீக்ஷனா, மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், போட்டியின் போது மும்பை வீரர் பொல்லார்ட் சிஎஸ்கே நட்சத்திர ஆல்ரவுண்டர் பிராவோவை முத்தமிடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆட்டத்தின் 14வது ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரின் கடைசிப் பந்தை எதிர்கொண்ட பொல்லார்ட் அருகில் தட்டிச் சென்று அப்படியே நின்றார். பந்து நேராக பிராவோவின் கைக்குள் சென்றது. அவர் விளையாட்டாக பொல்லார்ட் மீது பந்தை வீசினார். அவரும் பந்தை தட்டி பிராவோவின் தலையில் நேராக முத்தமிட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் பிராவோ மற்றும் பொல்லார்டு நீண்ட காலமாக ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகின்றனர். எதிரணி அணியில் விளையாடினாலும் இருவரும் எப்போதும் நண்பர்களாகவே இருந்துள்ளனர். இது இரு அணி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்ட் சமீபத்தில் அறிவித்தார்.
அடுத்து பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து மும்பையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சென்னை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

https://twitter.com/cric_big_fan/status/1517159956503416833?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1517159956503416833%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.behindwoods.com%2Fnews-shots%2Fsports%2Fmi-pollard-and-csk-dwayne-bravo-bromance-goes-viral.html

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..