Home Jaffna News கோவிட் தொற்றினால் வடமராட்சியில் ஒருவர் உயிரிழப்பு

கோவிட் தொற்றினால் வடமராட்சியில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 91 வயதுடைய முதியவர் ஒருவரே கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவரின் வீட்டிற்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்த சிலர் சுகயீனமடைந்த நிலையில், அவர்களுக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்தே உயிரிழந்த முதியவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மரணமடைந்த நபரது சடலம் உரிய நடைமுறைகளுக்கு அமைவாக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கோப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல்!
READ MORE >>>  113 எம்.பிக்களுடன் வந்தால் அரசை கையளிக்க தயார்; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு.
Previous articleஇன்றைய ராசிபலன் – 31/07/2022, விருச்சிக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள்
Next articleபிரித்தானியாவில் சிறுமி கொடூரமாக படுகொலை – இளைஞர் ஒருவர் கைது