Home Local news கோட்டா கோ கமவின் முக்கிய போராளி கைது!!

கோட்டா கோ கமவின் முக்கிய போராளி கைது!!

வலைஒளியாளரும் சமூக செயற்பாட்டாருமான கோட்டா கோ கம போராட்ட இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளர் ‘ரட்டா’ (Ratta) எனப்படும் ரதிந்து சேனாரத்ன இன்று(30) கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த 25ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கொம்பனித்தெரு காவல்துறையினராலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், சுமார் 2 மணிநேரம் வரை வாக்குமூலம் வழங்கிய அவர், இவ்வாறு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கோட்டா கோ கமவின் முக்கிய போராளி கைது!!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  பிரதமரை பதவி விலகுமாறு கோருவதற்கு எவருக்கும் அருகதை இல்லை - நாமல் கடும் கோபம்
READ MORE >>>  காலி முகத்திடலில் பலத்த பாதுகாப்பு… ! ஒன்றுகூடி இளைஞர்கள் போராட்டம் !!
Previous articleஅடுத்தடுத்து அரங்கேறும் கொலைகளும் பாலியல் வன்புணர்வுகளும்
Next articleலிட்ரோ வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி