ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக இன்று அனுராதபுரத்தில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வெளியிடங்களில் இருந்தும் ‘வழக்கம் போல’ ஆட்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.
இந்த நிலையில், பேரணியில் கலந்து கொள்பவர்கள் உட்கொள்வதற்கென அறிவித்தலிட்டு, புல், புண்ணாக்கு உள்ளிட்ட மாடுகளின் தீவனங்கள் அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.
அனுராதபுரம் இளைஞர் கழகத்தின் பெயரில் இந்த பதாதை வைக்கப்பட்டுள்ளது.