தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக விளங்குபவர் தான் இயக்குநர் அட்லீ, இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.
ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் .அதன்பின் விஜயுடனான பிளாக் பஸ்டர் கூட்டணியை தொடர்ந்து இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.
இவ்வாறு இருக்கையில் அட்லீ தற்போது நடிகர் ஷாருக் கானை வைத்து லைன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அட்லீயை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தன் அடுத்த படத்திற்காக கதை சொல்லும்படி அழைத்து இருக்கிறார்.
மேலும் அப்போது அட்லீ தனக்கு சம்பளமாக 35 கோடி ருபாய் வேண்டும் என கூறி இருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி ஆன அல்லு அர்ஜுன் அவரிடமே அவ்வளவு சம்பளம் சாத்தியம் இல்லை என சொல்லி அனுப்பிவைத்துவிட்டாராம்.
இந்த சம்பவம் முன்பே நடந்து இருந்தாலும், இந்த தகவல் தற்போது வெளிவந்து இருக்கிறது.