Home Local news கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியர் உயிரிழப்பு

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியர் உயிரிழப்பு

கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரதான வைத்தியராக செயற்பட்ட வைத்தியர் பத்ம சாந்த கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியர் உயிரிழப்பு

இரண்டு பிள்ளைகளின் தந்தையான பத்மசாந்த கொவிட் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வைத்தியராவார்.

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய அன்னாரின் இறுதிக் கிரியைகள் கண்டி, மஹாய்யாவ மயானத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கேகாலை பொது வைத்தியசாலையின் கர்ப்பிணி வார்டில் தாதியர் ஒருவர் உட்பட 4 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமகனால் தாய் கழுத்தறுத்துக்கொலை : செங்கலடியில் சம்பவம்
Next articleகாதலனால் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட எச்சங்கள் 6 வருடங்களின் பின்னர் மீட்பு!