கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கொரோனாத் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வருவதால் வைத்தியசாலைகளில் சிகிச்சையளிப்பதற்கு இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது.
இதனால் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களை வீட்டிலே வைத்து பரிசோதனை செய்து, நோய் அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் இவர்களை கட்டில்கள் வெற்றிடமாகவுள்ள வைத்தியசாலைகளில் அனுமதித்து சிகிச்சை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது மக்கள் மிக அவதானமாக செயற்படுமாறும், தேவையில்லாமல் ஒன்று கூடுவது, வெளியில் செல்வது போன்றவற்றை முற்றாகத் தவிர்க்குமாறும் நோய் அறிகுறிகள் உள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.