Home Local news கொவிட் தொற்றால் வீடுகளில் மரணித்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன!

கொவிட் தொற்றால் வீடுகளில் மரணித்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன!

கட்டான பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 25ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் வீடுகளுக்குள் மரணமடைந்த அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மரணமடைந்த அனைவரும் கோவிட் வைரஸ் தொற்றாலேயே மரணமடைந்துள்ளனர் என நீர் கொழும்பு வைத்தியசாலையின் அறிக்கைகள் தெரிவிப்பதாக, கட்டான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஏ.யூ.டி குலத்திலக்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர்களில் ஆண்கள் நால்வரும் பெண்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகொழும்பிலிருந்து பயணித்த கனரக வாகனம் விபத்து – ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில்
Next articleநாட்டு மக்களுக்கு முக்கிய தகவலை அறிவித்தார் இராணுவ தளபதி