Home Local news கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நாகப்பாம்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நாகப்பாம்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நேற்று நாகப் பாம்பு ஒன்று நுழைந்தமையினால் அனைத்து தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளர்களும் ஆச்சரியமும், அச்சமும் அடைந்தனர்.

பின்னர் மருத்துவமனையின் பாதுகாப்பு ஊழியர்கள் பெரும் முயற்சிகளுக்கு பின்னர் பாம்பை பாதுகாப்பாக பிடித்து ஒரு போத்தலில் அடைத்ததாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் தலைமை செவிலியர் புஷ்பா ரம்யானி டி சோய்சா தெரிவித்தார்.

பாம்பு சுவாசிப்பதற்கு ஏதுவாக போத்தலில் சிறு துளைகள் இட்டோம். அதன்பிறகு விலங்குகளைப் பெற சம்பந்தப்பட்டோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினோம்.

எனினும் யாரும் முன்வராத காரணத்தினால் இறுதியில் எங்கள் நண்பர் ஒருவர் பாம்பை ஒரு காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டதாகவும் அவர் கூறினார்.

வைத்தியசாலையில் பூனைகள் உள்ளிட்ட பிற விலங்குகள் இதற்கு முன்னர் தோன்றியிருந்தாலும், நாகப் பாம்பு தோன்றியது இதுவே முதன் முறை என்றும் புஷ்பா ரம்யானி டி சோய்சா சுட்டிக்காட்டினார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நாகப்பாம்பு! கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நாகப்பாம்பு! கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நாகப்பாம்பு!

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமற்றுமொரு யுவதியும் வன்புணர்வு? ரிஷாட்டின் மச்சான் கைது
Next articleபுத்தளம் அனுராதபுர பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து