Home Local news கொழும்பு உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட உணவில் விலங்கொன்றின் தலை

கொழும்பு உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட உணவில் விலங்கொன்றின் தலை

கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கிய உணவுப் பொதியில் எலியின் தலைப் போன்ற ஒரு விலங்கொன்றின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நேற்று காலை கொழும்பு – கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனிக்கு கோட்டை பொலிஸார் கொடுத்த அறிவுறுத்தலின் பிரகாரம், பிரதான உணவு பரிசோதகர் அடங்கிய குழுவொன்று உணவகத்திற்கு விஜயம் செய்துள்ளது.

குறித்த உணவுப் பொதியின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த விலங்கு எலி அல்ல முயல் என்று கூறியதாக மருத்துவர் தெரிவித்தார்.

கோழி சாப்பாட்டு பொதியை அனுப்புமாறு தமக்கு அழைப்பு கிடைத்ததாகவும், தங்களது உணவகத்தில் கோழி மற்றும் இறைச்சி ஆகிய இரண்டும் விற்கப்படுவதாகவும், தவறுதலாக இறைச்சியுடன் கூடிய சோற்றுப் பொதி அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனைக்கு அனுப்பி உணவு மாதிரியின் அறிக்கை கிடைத்த பின்னர் குறித்த விலங்கு எதுவென அடையாளம் கண்டறியப்படும் எனவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபுஷ்பா 2′ படத்தில் சமந்தாவுக்குப் பதிலாக கமிட் ஆன நடிகை யார் தெரியுமா ? வைரலாகும் தகவல் இதோ!!
Next articleதெலுங்கு சினிமா எப்படி எல்லா தடைகளையும் உடைத்தது மெகாஸ்டார் சிறப்பு பேட்டி !!