Home CRIME NEWS கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்டவர், கெலேதிவுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த விராஜ் லியனகே எனப்படும் 30 வயதுடைய திருமணமாகாத இளைஞர் என தெரியவந்துள்ளது.

மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் இளையவரான விராஜ், கொமாண்டோ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்று கொழும்பில் உள்ள சொகுசு உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

உணவகத்தில் சம்பளம் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக விராஜ் உணவக ஊழியர்கள் மற்றும் குழுவிற்கு எதிராக கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த விராஜ் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

more news… visit here
READ MORE >>>  இராணுவத்தினரின் வீதித்தடைக்குள் உந்துருளி விபத்து
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  பற்றியெரியும் அமைச்சர் பந்துல குணவர்தன வீடு!
READ MORE >>>  இராணுவத்தினரின் வீதித்தடைக்குள் உந்துருளி விபத்து
Previous articleமீண்டும் இரவு நேர மின்வெட்டு! வெளியானது நேர அட்டவணை
Next articleஅட்டுளுகமையில் ஆயிஷாவின் மரண ஓலம் ஓய்வதற்குள் வவுனியாவில் ஒரு யதுசி