பத்தரமுல்லை நாடாளுமன்ற சுற்று வட்ட பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்ற இரண்டு துறவிகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டத்தில் செய்தி சேகரித்த ஒரு பத்திரிகையாளர் ஒரு பொலிஸ்காரரால் தாக்கப்பட்டார். இதை தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டதுடன், ஊடகவியலாளர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் சூடான வார்த்தை பரிமாற்றம் இடம்பெற்றது.
போராட்டக்காரர்கள் 33 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிராக இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பேருந்தில் அடித்து உதைத்து பொலிஸார் ஏற்றும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.