கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் இராணுவ கவச வாகனங்களுடன் முப்படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த 9ஆம் திகதி அலரி மாளிகை முன்பு மகிந்தவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களை தாக்கியிருந்தனர்.
இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக வன்முறை சம்பங்கள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் நாளைய தினம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே தற்போது கொழும்பின் பல பகுதிகளில் இவ்வாறு இராணுவ வாகனங்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.