Home Uncategorized கொள்ளை அடிக்க கூட்டு சேர்க்கும் அஜித், AK 61 தெறிக்க விடும் அப்டேட்

கொள்ளை அடிக்க கூட்டு சேர்க்கும் அஜித், AK 61 தெறிக்க விடும் அப்டேட்

அஜித் நடித்து வரும் ’அஜீத் 61’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. எச். வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் இதுவொரு வங்கி கொள்ளை குறித்த கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது.

ak

மேலும் இந்த படத்தில் சமீபத்தில் நடிகை மஞ்சுவாரியர் மற்றும் ஜான் கொகைன் ஆகியோர் இணைந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இணைந்து உள்ளதாக நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

அஜித் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது. ஒன்று போலீஸ் மற்றொன்று வங்கி திருடனாக இருக்கலாம் என திரை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தை பற்றிய வேறு எந்தவொரு அப்டேட்ஸும் வெளியில் கசியாதவாறு இந்த படத்தின் இயக்குனர் எச்.வினோத் படப்பிடிப்பில் யாரும் மொபைல் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவு போட்டுள்ளாராம்.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’அஜீத் 61’ திரைப்படம் அற்புதமான படம் என்றும், அதில் ஒரு நல்ல கேரக்டர் எனக்கு கிடைத்துள்ளது என்றும் நல்ல தளம் கிடைத்து உள்ளது என்றும் அதை 100% கடுமையாக உழைத்து அந்த படைப்புக்குள் நானும் இருக்கிறேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து மஞ்சு வாரியர், ஜான் கொகைனை அடுத்து சமுத்திரக்கனியும் இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநந்தரட்ண தேரர் படுகொலை – 13.05.2007
Next articleமனசுல இன்னும் சின்ன புள்ளன்னு நினைப்பா குட்டப் பாவாடையில் குனிஞ்சி பாக்க வச்ச ராய்லட்சுமி…