கிளிநொச்சி – புளியம்பொக்கனை பகுதியில் மூன்று கொள்ளையர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியதில், வீட்டிலிருந்த தம்பதியினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வீட்டினுள் புகுந்த கொள்ளைக்காரர்களால் வீட்டிலிருந்த கணவன், மனைவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கணவரின் கை பகுதியில் வெட்டுக்காயங்களுடனும் மனைவி உலக்கையால் தாக்கப்பட்ட நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை வீட்டிலிருந்த பல பொருட்களும் சேதப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்ட கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற நிலையில் வீட்டிலிருந்த சிறுவர்களின் சத்தம் கேட்ட உடனே அயலவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
காயமடைந்த இருவரும் அயலவர்களின் உதவியுடன் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் களவாடப்பட்ட பொருட்கள் தொடர்பில் தெரியவரவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.