கொலைக்கு தயாரான நபர் கைது

நபர் ஒருவரைக் கொலை செய்வதற்காக சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றையும் நான்கு ரவைகளையும் வைத்திருந்த 49 வயதுடைய நபரை களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னர் 19 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இதற்கு முன்னர் 6 கொலை குற்றச்சாட்டுக்கள், பெண்ணின் கழுத்திலிருந்த தங்க நகையை திருடியமை, ஓட்டோ ஒன்றை திருடியமை உள்ளிட்டக் குற்றச்சாட்டுக்களுக்காக சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.

பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் மற்றொரு நபருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரைக் கொலை செய்வதற்கு சந்தேகநபர் தயாராக இருந்த நிலையில் பொலிஸார் துப்பாக்கியுடன் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டப் பின்னர் அவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..