திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று காலையில் இருந்து மதியம் வரையான காலப்பகுதியில் மட்டும் 16 கொரோனா தொற்று நோயாளர்கள் இனம் காணப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் இருவர் வைத்தியசாலை ஊழியர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருவதாகவும் இதனால் போதுமான இட வசதிகள் இன்றி பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை, இரண்டு நாட்களிற்கு ஒருமுறையே குடிநீர் வசதிகள் வழங்கப்படுவதாகவும், அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக பாரிய குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரியவருகின்றது.
மேலும் முறையான கன்ரின் வசதிகள் ஏதுமின்றியும், மின்சார தடையின் போது வைத்தியர்கள் தாதியர்கள், மெழுகு வர்த்தியுடனே நோயாளர்களை பார்வையிட்டு வருவதாகவும் பணிப்பாளரிற்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.