உலகெங்கிலும் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவை எதிர்த்துப் போராடி கொண்டிருக்கிறோம். ஒன்றரை வருடத்தில் சுமார் மில்லியன் கணக்கான மக்கள் இறந்துள்ளனர். தற்போது இந்த கொரோனாவிற்கு எதிரான பல தடுப்பு மருந்துகளை உலகெங்கிலும் உள்ள பல மருந்து நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.
பொதுவாக தடுப்பூசி போட்டால், அது உடலினுள் செயல்படுவதை ஒருசில பக்கவிளைவுகளின் மூலம் வெளிக்காட்டும்.
Best Foods That Are Effective In Relieving COVID Vaccine Side Effects
அந்த வகையில் கொரோனா தடுப்பூசியால் ஊசி போட்ட இடத்தில் புண், தலை வலி, காய்ச்சல், உடல் வலி, பலவீனம் மற்றும் உடல் சோர்வு போன்ற கடுமையான பக்கவிளைவுகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
பொதுவாக இத்தகைய பக்கவிளைவுகள் தடுப்பூசி போட்ட 2-3 நாட்களுக்குள் சரியாகிவிடும்.
ஆனால் நீங்கள் தடுப்பூசி போட்ட உடனேயே வழக்கமான செயல்களை எவ்வித இடையூறும் இல்லாமல் செய்ய வேண்டுமானால், ஊசி போட்ட பின் ஒருசில சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
கீழே கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
மஞ்சள்
இந்திய உணவுகளில் சமைக்கும் போது அவசியம் சேர்க்கும் ஓர் உணவுப் பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், அழற்சி எதிர்ப்பு பண்புகள், வலி நிவாரணி பண்புகள் மற்றும் பூஞ்டிச எதிர்ப்பு பண்புகள் போன்றவை உள்ளதால், இதை உட்கொள்ளும் போது, அது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கும்.
முக்கியமாக மஞ்சளில் குர்குமினாய்டுகள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளதால், இது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஓர் அற்புதமான உணவாக கூறப்படுகிறது.
எனவே கொரோனா தடுப்பூசி போட்டவர்கள், அதன் பக்கவிளைவுகளைக் குறைக்க, மஞ்சளை சுடுநீரில் போட்டு குடிக்கலாம் அல்லது அன்றாட உணவில் சேர்த்து வரலாம்.
இஞ்சி
இஞ்சி ஒரு அற்புதமான மசாலாப் பொருள். இது உணவிற்கு சுவையையும், மணத்தையும் தருவதோடு, உணவில் பல மருத்துவ பண்புகளையும் சேர்க்கும்.
அமினோ அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய நொதிகளால் நிரம்பிய இஞ்சி மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது.
அதற்கு இஞ்சியை அன்றாட உணவில் சமைக்கும் போது சேர்க்கலாம் அல்லது இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கலாம்.
பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளில் டயட்டரி நார்ச்சத்து, வைட்டமின் சி, புரோவைட்டமின் ஏ கரோட்டினாய்டுகள், ஃபோலேட், மாங்கனீசு மற்றும் மிகவும் முக்கியமாக வைட்டமின் கே ஆகியவை உள்ளன.
இந்த சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை தக்க வைத்துக் கொள்ளவும், சோர்வை குறைவாக உணரவும் வைக்கும். ஆகவே உங்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட பின் மிகுந்த சோர்வாக இருந்தால், பச்சை இலைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நீர்ச்சத்துள்ள உணவுகள்
கொரோனா தடுப்பூசி போட்ட பின் நீர் அதிகம் குடிக்க வேண்டுமென்று சிடிசி அறிவுறுத்தியுள்ளது. நீரை மட்டுமின்றி, நீர்ச்சத்துள்ள உணவுகளையும் சாப்பிட வேண்டும்.
கொரோனா தடுப்பூசிக்கு பின் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வது, உடல் வெப்பநிலை மற்றும் மன நிலையைப் பராமரிக்க உதவும். நீர்ச்சத்துள்ள உணவுகள் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற்றால்,
அது உடலை புத்துணர்ச்சியுடனும், அமைதியுடனும் வைத்திருக்கும். எனவே தடுப்பூசி போட்ட பின், ஆரஞ்சு, முலாம் பழம், வெள்ளரிக்காய் மற்றும் பீச் ஆகியவற்றை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
தானியங்கள்
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், எப்போதும் குடல் ஆரோக்கியத்தையும், செரிமான அமைப்பையும் பராமரிப்பது மிகவும் முக்கியம்.
ஒருவரது செரிமானம் செயல்பாடு மற்றும் குடல் சிறப்பாக இருந்தால், தானாகவே ஆரோக்கியமான உடலைப் பெறலாம். உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க, தானிய உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும்.
நார்ச்சத்துள்ள உணவுகள் குடலால் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சி, உடலுக்கு அதை ஆற்றலாக மாற்றும்.
எனவே தானிய வகை உணவுகளை கொரோனா தடுப்பூசி போட்ட பின் சாப்பிடுவது மிகவும் நல்லது.