ஹொரண – வேகட வீதியின் பெரண்டிய விகாரைக்கு அருகில் பூட்டப்பட்ட வீட்டில் இருந்து 86 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ஆசிரியர்களான தம்பதியினரின் வீட்டு பணிப்பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டு உரிமையாளர்களான தம்பதியினர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அந்த வீட்டு பணிப்பெண் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளவில்லை. ஆசிரியர் தம்பதி வைத்தியசாலைக்கு சென்ற பின்னர், பணிப்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.