கொரோனா நோய் தொற்றி குணமடைந்தவர்களை டெல்டாவின் உருமாறிய வைரஸ் மீண்டும் தொற்றுமா என்று மக்களிடம் இருக்கும் கவலையளிக்கும் கேள்விக்கு ஐசிஎம்ஆர்( Indian Council of Medical Research) தனது ஆய்வில் ‘தொற்ற அதிக வாய்ப்பில்லை’ என்று நல்ல செய்தியை பதிலாக அளித்துள்ளது
கோவிஷீல்ட் தடுப்பூசியை 2 டோஸ்கள் போட்டுக்கொண்டவர்களை விடவும் கொரோனா நோய் தாக்கி அதிலிருந்து குணமடைந்தவர்கள் அதிக பாதுகாப்புடன் இருப்பார்கள் என்கிறது ஐசிஎம்ஆர் ஆய்வு.
இது தொடர்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை 5 வகையாகப் பிரித்து ஐசிஎம்ஆர் மேற்கொண்ட ஆய்வில் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு டெல்டா வேரியண்ட் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் கோவிட்-19லிருந்து மீண்டவர்களுக்கு எதிர்ப்பாற்றல் பாதுகாப்பு அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது.
ஐசிஎம்ஆர், தேசிய வைரலாஜி ஆய்வுக் கழகம். நியூரோ சர்ஜரி துறை, ராணுவ மருத்துவக் கல்லூரி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இதற்காக வகைப்படுத்தப்பட்ட 5 பிரிவு:
ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள்
2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள்
3. கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்
4. கோவிட்19-லிருந்து குணமடைந்து 2 டோஸ்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்
5. பிரேக் த்ரூ கோவிட்-19 கேஸ்கள்.
இதில் 2 டோஸ்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பி.1, பி.1.617 கொரோனா வேரியண்டிலிருந்து முழு பாதுகாப்பு இருப்பது தெரியவந்தது.
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் ஒரு டோஸ் வாக்சின் போட்டுக் கொண்டால் கூட அவர்களுக்கு மீண்டும் தொற்றும் வாய்ப்பு மிக மிக அரிது என்று கூறுகிறது ஆய்வு.
மேலும், கோவாக்சின், கோவிஷீல்ட் என்ற இரண்டு தடுப்பூசிகளுமே டெல்டா பிளஸ் வேரியண்டுக்கு எதிராக நன்றாகச் செயல்படுகிறது என்கிறது ஐசிஎம்ஆர்.
ஆனால் இதற்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவ ஆய்வில் கூறும்போது, தடுப்பூசிகள் உருவாக்கும் ஆண்ட்டிபாடியான இம்யூனோகுளோபுலின் ஜி என்ற ஆண்ட்டிபாடியை கோவிட்-19 தடுப்பாற்றல் கொண்டது என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.