Home முள்ளிவாய்க்கால் கொத்து கொத்தாய் கொன்றழிக்கப்பட்ட எம்மவர்கள்! – நிலத்துக்காய் போராடியவர்கள் நிலத்தினுள் மடிந்து இன்றுடன் 13 ஆண்டு

கொத்து கொத்தாய் கொன்றழிக்கப்பட்ட எம்மவர்கள்! – நிலத்துக்காய் போராடியவர்கள் நிலத்தினுள் மடிந்து இன்றுடன் 13 ஆண்டு

இற்றைக்கு பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் தம் நிலத்தின் விடுதலைக்காய் போராடிய ஈழத்தமிழர்களை மிகமோசமான முறையில் அழித்து, இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு வலயங்கள் என்று அரசாங்கத்தினால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த அப்பாவி மக்களையும், காயமடைந்து வைத்தியாசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மக்களையும் இராணுவம் குண்டுகளை வீசிக் கொன்றொழித்தது.

உணவுப்பொருட்களையும், காயமடைந்தவர்களுக்கான மருந்துப்பொருட்களையும் அனுப்பிவைக்காமல் இலங்கை அரசாங்கத்தினால் மிகக்கொடூரமான முறையில் தமிழின அழிப்பு மேற்கொள்ளப்பட்டது .

மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் 2009 ஆம் ஆண்டு இதே நாட்களில் முடிவுக்கு வந்தது.

மே மாதம் 11 முதல் 18 ஆம் திகதி வரையான ஒரு வாரகாலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகவும், 18 ஆம் திகதி போரில் உயிரிழந்தவர்களை நினைவுக் கூருவதற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகவும் தமிழ்மக்களால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது.

இன்று வரை நீதி கிடைக்காத இந்த கொடூர இன அழிப்பை பல தடைகளை தாண்டியும் தமிழர்கள் வருடா வருடமாக நினைவுகூர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமிழினப்படுகொலையின் 13 ஆம் ஆண்டிற்கான நினைவேந்தல் இன்று மே 18 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறவுள்ளது.

தமிழர்கள் என்ற ரீதியில் வேற்றுமைகளைத்துறந்து அனைவரையும் இதில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் நாளை மாலை 6 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணி ஒலி எழுப்புவதுடன், இயலுமானவரை முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் பரிமாறி தமிழின அழிப்பினை நினைவுகூருவோம் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

101627930 Img 5102 கொத்து கொத்தாய் கொன்றழிக்கப்பட்ட எம்மவர்கள்! - நிலத்துக்காய் போராடியவர்கள் நிலத்தினுள் மடிந்து இன்றுடன் 13 ஆண்டு Large 0 02 05 B507B6072B310Fc6E786Bc882533F26B1D45E9A57Ed2D8Df2875222565756Ecc 1C6Da3105Cdd1F Jpg 20138C93Bce72315200728Ccb4A5E42D Mull Mullivaaikkaal Remembrance Day

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்.திருநெல்வேலி – பூங்கனிச்சோலையை அண்மித்த பகுதியில் கோர விபத்து..! இருவர் சம்பவ இடத்திலேயே பலி, 3 பேர் படுகாயம்
Next articleஉண்மையிலேயே அஜித்துக்கு இரட்டை வேடமா இல்லையா ? யோசிக்காமல் பதில் கூறிய போனி மாம்ஸ் !!