இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகக் கட்டடத் தொகுதியின் 06 ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து சந்தேகத்துக்கிடமான முறையில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட முகாமைத்துவ உதவியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த யுவதி, பாணந்துறைப் பகுதியைச் சேர்ந்த 31 வயதானவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என்று கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.