மலையாளத்தில் கடந்த 2016ல் அனுராக கரிக்கின் வெள்ளம் என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார். சமீபத்தில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
திரெளபதை கதாபாத்திரத்தில் பார்வையாலேயே தனுஷை காதலில் விழ வைக்கும் ரஜிஷா விஜயனின் மேக்கப் இல்லாத நடிப்பும் முகத்தில் இருக்கும் அழகிய தழும்பும் கவனத்தை ஈர்த்து ரசிக்க வைத்தன. ‘கர்ணன்’மூலம் ரஜிஷா விஜயனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.இதைத்தொடர்ந்து ரஜிஷா விஜயன் அடுத்து எந்தப் படத்தில் நடிக்கப்போகிறார் என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்தது.
இந்நிலையில், நடிகர் கார்த்தியின் ’சர்தார்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இணைந்திருக்கிறார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார் ரஜிஷா விஜயன். சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது பசங்களின் லேட்டஸ்ட் கிரஷ் ரஜிஷா விஜய் தான்.
இந்நிலையில், தண்ணீருக்குள் இருத்த படி ஒரு போட்டோ சூட் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
கருப்பு நிற உடையில் கருகரு என இருக்கும் தண்ணீரில் செவசென என இருக்கும் தனது அழகை காட்டி இளசுகளை புலம்ப விட்டுள்ளார் அம்மணி.