Home Jaffna News கொக்குவிலில் மீன் வியாபரிகள் கைது! (காணொளி)

கொக்குவிலில் மீன் வியாபரிகள் கைது! (காணொளி)

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் மீன் வியாபாரம் செய்த ஆறு வியாபாரிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதைய பயணத்தடை காலத்தில் நடமாடும் வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதியளித்துள்ள நிலையில் தேவையற்ற வகையில் மக்களை ஒன்று திரட்டி மீன் வியாபாரம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அத்துடன் அத்துடன் அவர்கள் வியாபாரத்துக்கென வைத்திருந்த மீன்கள் மற்றும் அது சம்பந்தமான வியாபார பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நல்லூர் பிரதேசசபையால் ஏற்கனவே இவ்வாறான வியாபார நடவடிக்கைகளை மக்களை திரட்டி செய்ய வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தநிலையில் தொடர்ச்சியாக அப்பகுதியில் வியாபாரம் மேற்கொண்ட நிலையில் இன்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகொழும்பில் இருந்து வந்து கூட்டம் போட்டவனை விட்டுவிட்டு மீன் விற்றவனை பிடித்து சென்ற பொலிசார்
Next articleமாங்காய் பறிக்க ஏறியவர் விழுந்து உயிரிழப்பு