மாலபே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பொலிஸ் காதலியை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் எம்பிலிபிட்டிய பொலிஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் எம்பிலிப்பிட்டிய பொலிஸில் கடமையாற்றும் பெண் கான்ஸ்டபிள் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
பொலிஸ் காதலி கடந்த வாரம் காதலை துண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பொலிஸ்காரர், எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி, அங்கிருந்த பல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சனிக்கிழமை அவர் தனது காதலியின் எம்பிலிபிட்டிய பொலிஸ் குடியிருப்புக்கு வந்து, கதவை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, அங்கு வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.