புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் கொவிட் 19 சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் 10 பேரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழில்சாலை இன்று இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்ற புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் உப தவிசாளர் உள்ளிட்ட 10 பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் ஆடைத்தொழில்சாலையினை இயக்குவதற்கு புதுக்குடியிருப்பு சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி கொடுத்துள்ள நிலையில்
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்ற புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேஐயந் மற்றும் 6 பெண்கள் உள்ளிட்ட 10 பேரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இவர்களை பொலீஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.