தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள், தாய் மற்றும் குடும்பத்தினரை, அமைச்சர் நாமல் ராஜபக்ச சந்தித்து பேசினார்.
மேலும் கடந்த 24ம் திகதி விடுதலை செய்யபட்ட கைதிகளில் ஒரு பகுதியினர், தமது நன்றியை கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்களுக்கும், தமது விடுதலையை சாத்தியப்படுத்திய அரசாங்கத்துக்கும் தெரிவித்ததோடு, மிகுதி கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உறவுகளால் அமைச்சரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய கவனம் எடுப்பதாக இதன்போது அமைச்சர், உறவுகளிடம் தெரிவித்தார்.