கன்னட இயக்குநரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் 14ம் திகதி வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் கே ஜி எஃப் . இப்படத்தில் கன்னட நடிகரான யாஷ் கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தின் முதல் பாகம் சிறப்பாக இருந்த காரணத்தினால் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டது.
மேலும் முதல் பாகத்தை விட இந்த படத்தில் பல மடங்கு மாஸ் சீன்கள் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் சிறப்பாக இருந்ததால் முதல் படத்தைவிட இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கி வருகிறது.இதுவரை 900 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ஸ்ரீநிதி ரெட்டி தனது திமிரும் பேச்சு மற்றும் சென்டிமென்ட் சீன்கள், ரொமாணடிக் போன்றவற்றில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக மாறி உள்ளார். இதனால் விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
நடிப்பதைத் தவிர மாடர்லிங் துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அஜித்தின் வலிமை படத்தை பார்த்து விட்டீர்களா என கேட்டுள்ளனர் அதற்கு அஜித்தின் விஸ்வாசம் பிற படங்களைப் பார்த்து உள்ளேன் ஆனால் தற்போது கே ஜி எஃப் 2 படத்தின் புரமோஷனுக்காக சுற்றி வருவதால் வலிமை படத்தை பார்க்க முடியவில்லை என கூறி உள்ளார் ஆனால் நிச்சயம் பார்ப்பேன் எனக்கு பிடித்த நடிகரும் அவர் தன் எனவும் கூறியுள்ளார்.