குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் கிராமத்தில் குப்பி விளக்கு வீழ்ந்து தீப்பற்றியதில் காயமடைந்த 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி வீட்டில் குப்பி விளக்கு தவறி வீழ்ந்தில் குழந்தையின் உடலில் தீப்பற்றிய நிலையில் தர்மபுரம் ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி கொண்டு சென்று பின்னர் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது.

இந்த குழந்தையின் உடலம் இன்று இளங்கோபுரம் இந்து மயானாத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..