Home Jaffna News குளிர்பான நிலையத்திற்கு டீசலை வாரி வழங்கும் யாழ் மாவட்ட செயலகம்.. அன்றாடம் தொழில் செய்வோர் நடுத்தெருவில்

குளிர்பான நிலையத்திற்கு டீசலை வாரி வழங்கும் யாழ் மாவட்ட செயலகம்.. அன்றாடம் தொழில் செய்வோர் நடுத்தெருவில்

யாழ் மாவட்ட செயலகத்திற்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற குளிர்பான நிலையம் ஒன்றிற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 200 லீட்டர் டீசலை பெறுவதற்குரிய அனுமதியை யாழ் மாவட்ட செயலக உயர் அதிகாரி ஒருவர் குறித்த குளிர்பான நிலையத்திற்கு வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது குறித்த குளிர்பான நிலையம் ஒன்றினால் தமது தேவை கருதி சுமார் 200 லிட்டர் டீசலை வழங்குமாறு மாவட்ட செயலகத்திற்கு குறித்த வியாபார நிலையம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறியக் கிடைக்கிறது.

யாழ் மாவட்டத்திலும் இரு மாதங்களுக்கு மேலாக எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காணப்படும் நிலையில் குளிர்பான நிலையத்திற்கு ஏன் முண்டியடித்துக் கொண்டு எரிபொருள் வழங்கினார்கள் என்ற கேள்வி எழுகிறது.

யாழ் மாவட்டத்தில் சாதாரணமாக உற்பத்தி துறையில் ஈடுபடும் வியாபாரிகள் , நாளாந்த உணவு தயாரிப்பாளர்கள், முச்சக்கர வண்டிகளில் நடமாடும் வெதுப்பகப் பொருட்களை விற்பனை செய்வோம் ,மரம் வெட்டும் கூலி தொழிலாளர்கள்,ஊடகத்துறையில்.தனியார் துறையினர் மற்றும் மீன் வியாபாரிகள் என நாளாந்த வருமானத்திற்காக ஏங்கித் தவிப்போர் எரிபொருளை பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

குளிர்பான நிலையத்திற்கு டீசலை வாரி வழங்கும் யாழ் மாவட்ட செயலகம்.. அன்றாடம் தொழில் செய்வோர் நடுத்தெருவில்

நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலைமை நீடித்து வரும் நிலையில் அரசாங்கத்தினால் கடந்த மாதம் முதல் அத்தியாவசிய சேவைக்கு மட்டும் எரிபொருள் விநியோகிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது .

எனினும் கடந்த 4ஆம் மாதம் முதல் யாழில் உள்ள குளிர்பான நிலையம் ஒன்றுக்கு நாள் ஒன்றிற்கு சுமார் 200 லீட்டர் டீசலை பெறுவதற்கான அனுமதியை மாவட்ட செயலக உயர் அதிகாரி ஒருவரால் வழங்கப்பட்டுள்ளது.

READ MORE >>>  அன்னை பூபதியை நினைவு கூரத் தடை

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு ரூபா 1000 முதல் 1500 ரூபாய் வரை விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில் யாழ் மாவட்ட செயலகம் எவ்வாறு அத்தியாவசிய சேவையில் உள்ளடக்கப்படாத குளிர்பான நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு பெருந்தொகை எரிபொருளுக்கு அனுமதி வழங்கிய பிண்ணனி என்ன?

தற்போது மேலதிக அரசஅதிபரான பிரதீபன் எரிபொருள் விநியோகத்தில் பெரும் ஊழல் புரிவதாகவும் இது தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்து வருவதால் அதனை மூடி மறைப்பதற்காக கீழே கையொப்பம் இட்டுள்ள பெண் அதிகாரியை மாட்டி விட்டு தப்ப கடுமையான வற்புறுத்தலின் பெயரில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்ற வருவதாக அறிய முடிகின்றது. எரிபொருள் பெற அந்தரித்துத் திரியும் பொதுமக்களே தீர்மானியுங்கள்.

யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருளுக்கான நீண்ட வரிசை காணப்படுகின்ற நிலையில் இவ்வாறு மேல் அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயல்படுவது அவர்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழப்பதாகவே அமையும்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  அன்னை பூபதியை நினைவு கூரத் தடை
Previous articleஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல்: 25 வயதுடைய நபர் உயிரிழப்பு!
Next articleமுள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல்