முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக படகில் சென்ற உத்தியோகஸ்தர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
25 வயதுடைய வித்தியாபுரம் ஒட்டுசுட்டானை சேர்ந்த நமசிவாயம் டிலக்சன் என்ற நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவர் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
05.04.2022 இன்று மாலை 3.00 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக சென்றவேளை படகு கவிழ்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து சடலத்தினை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார்கள்
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.