குரங்கம்மை ( Monkeypox ) என்பது ஒரு வைரஸ் தொற்றாகும். இந்த வைரஸ் தொற்று உண்டாவது மிகவும் அரிதானது.
இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு பெரும்பாலும் மிதமாகவே இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சில வாரங்களிலேயே குணமடைந்து விடுவார்கள் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை கூறுகிறது.
எனினும் சில நேரங்களில், இது தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இது மரணங்களை உண்டாகியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.
குரங்-கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது, இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
குரங்-கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்-கம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும்.
ஏற்கெனவே பாதிப்புக்கு உள்ளான ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம் குரங்கம்மை நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்.
தோலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மூச்சுக் குழாய் வழியாகவும், வாய், மூக்கு, மற்றும், கண்கள் வழியாகவும் மனித உடலுக்குள் குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி நுழையும். குரங்-கம்மை பாலியல் ரீதியாகப் பரவும் நோய் என்று கூறப்பட்டதில்லை.
ஆனால் இது உடலுறவின்போது ஒருவருடன் ஒருவர் உடல் ரீதியாக நெருக்கமான தொடர்பில் இருந்தாலே பரவக்கூடியது.
நோயால் பாதிக்கப்பட்ட குரங்கு, அணில், எலி போன்ற விலங்குகளுடன் தொடர்பில் இருக்கும்போதும், குரங்-கம்மையை உண்டாக்கும் வைரஸ் கிருமி படிந்துள்ள படுக்கைகள் ஆடைகள் போன்றவை மூலமும் இக்கிருமி பரவுகிறது.
Monkeypox is a viral infection. Infection with this virus is very rare. The incidence of this viral infection is often mild.
Britain’s National Health Service says the victims will recover in a few weeks. However, in some cases, this can cause serious harm.
It has also been reported to cause deaths in West African countries. Experts say that monkeys do not spread easily from one person to another, thus reducing the risk to the public.
There is no single vaccine for monkey-pox. The measles vaccine provides up to 85 percent protection against monkey-pox, as it contains the virus that causes monkeypox, just like the virus that causes measles.
Monkey-pox can be spread from person to person through close contact with someone who is already infected.
The aphid virus enters the human body through wounds on the skin and through the trachea, mouth, nose, and eyes. Monkeypox has never been said to be a sexually transmitted disease.
But it can be spread only if one is in close physical contact with one another during sexual intercourse.
The virus is transmitted through contact with infected monkeys, squirrels, and rats, as well as through bed bugs and clothing that cause the monkey-bite virus.