Home மலைநாட்டு செய்திகள் குடும்பத்தை வாழ வைக்க முடியவில்லை: டெலிகாம் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர்

குடும்பத்தை வாழ வைக்க முடியவில்லை: டெலிகாம் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர்

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக தனது குடும்பத்தை வாழ முடியாது எனக் கூறி பொகவந்தலாவ நகருக்கு அருகில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற ஒரு பிள்ளையின் தந்தை பொகவந்தலாவ பொலிஸாரால் டவரில் இருந்து கீழே இறக்கப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேம்பியன் எல்டோப்ஸ் தோட்டத்தில் வசிக்கும் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான செல்வநாயகம் புவேந்தரன் என்பவர் கடந்த 4 ஆம் திகதி மாலை 6 மணியளவில் 80 மீற்றர் உயரமான கோபுரத்தில் ஏறியுள்ளார்.

கோபுரத்தின் மீது இருந்து, தனது குடும்ப உறுப்பினர்கள் நாட்டில் உள்ள வாழ்க்கைச் செலவில் வாழ முடியாத நிலையில் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சத்தம் போட்டதாக அப்பகுதி மக்கள் பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸார் உடனடியாக கோபுரத்தின் மீது நின்றிருந்த நபரின் மனைவியை அழைத்து பல தடவைகள் ஒலிபெருக்கி மூலம் கணவனை கீழே இறங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த 4ஆம் திகதி இரவு 9 மணியளவில் பொகவந்தலாவ பிரதேசத்தில் கோபுரத்தின் மீது நின்றிருந்த தந்தை மற்றுமொரு இளைஞனின் உதவியுடன் கீழே இறங்கி வந்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் சுமார் 1 வயதுடைய தனது குழந்தைக்கு பால் மா பாக்கெட் கூட வாங்க முடியாத நிலையிலேயே தற்கொலைக்கு முயன்றதாக தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் செல்வநாயகம் புவேந்திரன் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபகிருங்கள் ;- நிஜமாகவே இலங்கையின் நிலை தான் என்ன?
Next articleபொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் வடக்கில் காணி அபகரிப்பு