கடந்த 30 நாட்களில் கிழக்கில் 462 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் 297 தொற்றாளர்கள் திருகோணமலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
கடந்த ஏழு நாட்களில், திருகோணமலையில் மட்டும் 136 கோவிட் தொற்று நோயாளர் பதிவாகியுள்ளனர், அதே நேரத்தில் திருகோணமலையில் நேற்று மட்டும் 46 தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைஅலுவலகம் தெரிவித்துள்ளது.
டோக்கியோ சிமென்ட் தொழிற்சாலை கோவிட் வழிகாட்டுதல்களை பின்பற்றாததால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது,
மேலும் கோவிட் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வைத்தியர் டி.ஜி.கொஸ்தா தெரிவித்துள்ளார்.