கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று(10) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்
ஏ9 வீதியில் தெற்கு நோக்கி பயணித்த ரிப்பர் வாகனமும், அவ்வீதியில் வடக்கு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியத்தில்
இளைஞன் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்