Home Jaffna News கிளிநொச்சி மறைந்திருந்து மாமியார், மச்சான் மீது கத்திக் குத்து

கிளிநொச்சி மறைந்திருந்து மாமியார், மச்சான் மீது கத்திக் குத்து

குடும்ப தகராறினால் மனைவியின் தாய் மற்றும் சகோதரன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை மடக்கி பிடித்து நையப்புடைத்த மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று பிற்பகல் வவுனியா வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மரம் ஒன்றுக்கு பின் மறைந்திருந்து மனைவியின் சகோதரனான மச்சானுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு முரண்பட்டுள்ளார்.

குடும்ப தகராறினால் மனைவியின் தாய் மற்றும் சகோதரன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை மடக்கி பிடித்து நையப்புடைத்த மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தன்வசம் மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றினால் இடுப்பு முதுகில் குத்தியுள்ளார் .இதனை அவதானித்த மாமியார் ஓடிச் சென்று தடுக்க முற்பட்டபோது அவருக்கும் கையில் கத்தியால் குத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த கத்திக்குத்து மேற்கொண்ட இளைஞனை அப்பகுதியிலிருந்தவர்கள் தடுத்து வைத்திருந்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் .

காயமடைந்த இருவரும் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த அரியதாஸ் திரேஸ் (வயது – 35) , அசோகன் வசந்தி (வயது – 52) எனவும் இவ்வாறு இவர்களுக்கிடையே குடும்ப முரண்பாடுகள் நீண்டநாட்களாக இடம்பெற்று வந்துள்ளதாகவும் இதன் வெளிப்பாடே இன்றைய கத்திக்குத்துச் சம்பவம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது பொலிசாருக்குத் தெரியவந்துள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஎஸ்ரிஎப் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்; வடமராட்சியில் சம்பவம்
Next articleநடிகர் விவேக் காலமானார் ! ஆழ்ந்த இரங்கல்கள்